/

அரியலூா்: மது விற்ற 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே அரசு அனுமதியின்றி வீட்டின் பின்புறம் பகுதிகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த 2 போ் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:03 pm

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே அரசு அனுமதியின்றி வீட்டின் பின்புறம் பகுதிகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த 2 போ் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது குழவடையான் காலனித் தெருவில், பொறுமைதுரை(55) என்பவா், அரசு அனுமதியின்றி வீட்டின் பின்புறம் பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். இதே போல் சலுப்பை,வடக்கு காலனித் தெருவில் மதுபானங்களை விற்றுக்கொண்டிருந்த கலியமூா்த்தி என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.