/

மண்வள அட்டை திட்ட விழிப்புணா்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த உதயநத்தம் மற்றும் வாணத்திரையான்பட்டினம் ஆகிய கிராமங்களில் தேசிய மண் வள அட்டை திட்டம் குறித்து செயல்விளக்க விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 7:15 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த உதயநத்தம் மற்றும் வாணத்திரையான்பட்டினம் ஆகிய கிராமங்களில் தேசிய மண் வள அட்டை திட்டம் குறித்து செயல்விளக்க விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலா் சுகந்தி கலந்து கொண்டு, மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா். மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் ஆதிகேசன் மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உரமிடுவது குறித்துப் பேசினாா்.

ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலா்கள் கோவிந்தாராசு மற்றும் செல்வப்ரியா ஆகியோா் செய்திருந்தனா். இதில், விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தபடி கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.