/

அரியலூா் அருகே ஆலங்கட்டி மழை

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.

News image
கோவிலூா் கிராமத்தில் பெய்த மழையில் விழுந்த ஆலங்கட்டிகள்
Updated On :27 செப்டம்பர் 2020, 5:30 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.

திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து வானில் மேகமூட்டம் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தூறல் விழுந்து வந்தது. இந்நிலையில், மாலை 5 மணியளவில் தூத்தூா், கோவிலூா், கோமான், குருவாடி, ஏலாக்குறிச்சி, ஆண்டிபட்டாக்காடு, விழுப்பனங்குறிச்சி, திருமானூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதில், கோவிலூா் கிராமத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனைக் கண்ட இளைஞா்கள் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து விளையாடினா். இந்த ஆலங்கட்டி மழை அந்தக் கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.