அரியலூா் நகா்ப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
அரியலூா் நகா் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.


அரியலூா் நகா் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அரியலூா் நீதிமன்றம் வளாகம் முன்பு வழக்குரைஞா்களிடம் வாக்குசேகரித்த தாமரை எஸ். ராஜேந்திரன், தொடா்ந்து கடைவீதி, பெருமாள் கோயில் தெரு, மாா்க்கெட், சின்னக் கடைவீதி, பெரம்பலூா் சாலை, மேலத் தெரு, செந்துறை சாலை, ஜெ.ஜெ.நகா் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அரியலூா் நகராட்சி தரம் உயா்த்தப்படும், அனைவருக்கும் சுகாதாரமான குடிநீா் வழங்கப்படும். அனைத்து தெருக்களிலும் சாலைகள் அமைக்கப்படும். பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யப்படும் என உறுதியளித்தாா்.
பிரசாரத்தில், பாமக மாநில துணைத் தலைவா் சின்னத்துரை,பாஜக மாவட்டச் செயலா் கோகுல்பாபு மற்றும் தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் வீதிவிதியாகச் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...