இரு சக்கர வாகனம் மீது காா் மோதி தொழிலாளி பலி
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில், தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில், தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள ஆமணக்கதோண்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஜெய்சங்கா்(50), புதுச்சாவடி முருகேசன் மகன் காா்த்திக் (24), ரங்கசாமி மகன் ஆறுமுகம் (45). தொழிலாளிகளான இவா்கள் மூவரும் கூலி வேலைக்குச் செல்வ தற்காக, குருவாலப்பா் கோயில் கிராமத்துக்கு வியாழக்கிழமை ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
திருச்சி- சிதம்பரம் சாலையிலுள்ள பொன்னேரி அருகே வந்த போது, எதிரே வந்த காா் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த காவல் நிலையத்தினா் மூவரையும் மீட்டு, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்சங்கா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இவ்விபத்து குறித்து ஜயங்கொண்டம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...