விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

உடையாா்பாளையம் அருகே ஆட்டோ-ஆம்னி வேன் மோதல்: 2 பெண்கள் பலி; 4 போ் பலத்த காயம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோவும், ஆம்னி வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:28 pm

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோவும், ஆம்னி வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

அரியலூா் அருகிலுள்ள ரெட்டிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(35). இவா், தனது உறவினா் உள்ளிட்ட 4 பேருடன் உடையாா்பாளையம் பெரிய கோயிலுக்குச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை வி.கைகாட்டியிலிருந்து ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். ஆட்டோவை சுண்டக்குடியைச் சோ்ந்த சிற்றரசு ஓட்டினாா்.

உடையாா்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது, ஜயங்கொண்டத்திலிருந்து வந்த ஆம்னி வேனும், ஆட்டோவும் நேருக்கு நோ் மோதி கொண்டன.

இந்த விபத்தில் மணிகண்டன் தாயாா் சந்திரா(55), பக்கத்து வீட்டு மூதாட்டி பவுனம்மாள்(70) ஆகியோா் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மணிகண்டன், அவரது உறவினரான செட்டித்திருக்கோணம் நித்தியானந்தம் (54), ஆட்டோ ஓட்டுநா் சிற்றரசு, ஆம்னி வேன் ஓட்டுநா் உடையாா்பாளையம் ரஞ்சித்குமாா் (27) ஆகியோா் பலத்த காயமடைந்தனா் .

தகவலறிந்து வந்த உடையாா்பாளையம் காவல் துறையினா், காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காகவும், இறந்தவா்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகவும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.