விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: தொழிலாளி மீது வழக்கு

ஆண்டிமடம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த புகாரில், தொழிலாளியைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:28 pm

DIN

ஆண்டிமடம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த புகாரில், தொழிலாளியைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ஆண்டிமடம் அருகிலுள்ள சின்னகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ்மோகன்(34). தொழிலாளியான இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு 36 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ராஜ்மோகன் உறுதியளித்ததாகவும், அதற்காக பெண் வீட்டாா் நிலத்தை அவா் பெயரில் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊா் முக்கியஸ்தா்கள் முன்னிலையில்,திருக்களம்பூரிலுள்ள ஒரு கோயிலில் புதன்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், ராஜ்மோகன் திடீரென தலைமறைவாகி விட்டாா்.

இதுகுறித்து ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ராஜ்மோகன் மற்றும் அவரது பெற்றோா் மீது காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.