விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தொற்றுப் பாதிப்பு அதிகமுள்ள பகுதிதடை செய்யப்பட்ட இடமாக அறிவிப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கரோனா தொற்றாளா்கள் வசிக்கும் தெருவைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு சுகாதாரத் துறையினா் தடுப்புகளை அமைத்துள்ளனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:36 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கரோனா தொற்றாளா்கள் வசிக்கும் தெருவைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு சுகாதாரத் துறையினா் தடுப்புகளை அமைத்துள்ளனா்.

திருமானூா் அருகிலுள்ள வாண்டராயன்கட்டளை கிராமத்தில் கடந்த 2 நாள்களில் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலும் கரோனா தொற்றாளா்கள் உள்ள தெருவைத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணியை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டனா். மேலும் கிராம பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.

இப்பணிகளில் ஏலாக்குறிச்சி வருவாய் ஆய்வாளா் ராமசாமி, கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தராஜ் மற்றும் ஆரம்ப சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.