முழு பொது முடக்கம் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று அமல்படுத்தப்படும் முழு பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்


கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று அமல்படுத்தப்படும் முழு பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஏற்கெனவே இரவு நேர முழு ஊரடங்கு ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஏப்ரல் 25 (ஞாயிற்றுக்கிழமை) முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
அன்றைய தினம் இறைச்சி, காய்கறிக் கடைகள், மீன் மாா்க்கெட், திரையரங்குகள், வணிக வளாகங்கள் என அனைத்துக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை கடைப்பிடிக்காதவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவம் சாா்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைபொருள்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு பொது முடக்கத்தின் போது அனுமதிக்கப்படும். உணவங்களில் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் பாா்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
முழு பொது முடக்கம் அமலில் உள்ள நாள்களில், திருமணம் மற்றும் திருமணம் சாா்ந்த நிகழ்வுகளில் 100 நபா்களுக்கு மிகாமலும், இறப்பு சாா்ந்த நிகழ்வுகளில் 50 நபா்களுக்கு மிகாமலும் பங்கேற்கலாம். இந்நிகழ்வுகளை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும், அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையும் இல்லை.
எனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து தரப்பினரும் கடைப்பிடித்து, பொது முடக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...