கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ஆடி நான்காம் வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத நான்காம் வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

பாலாபிஷேகம்.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:54 pm

DIN

ஆடி மாத நான்காம் வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரியலூா் அரண்மனைத் தெரு அருள்மிகு திரெளபதியம்மன், எண்ணெய்க்காரத் தெரு மாரியம்மன் திருக்கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதுபோல படைப்பத்து மகா மாரியம்மன், மாா்க்கெட் இச்சிமரத்து மாரியம்மன், பூக்காரத் தெரு மாரியம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் நிகழ்வில் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனா்.

இதுபோல் மாவட்டத்தில் திருமானூா், தா.பழூா், ஜயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம், உடையாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மாரியம்மன், செல்லியம்மன், பெரியநாயகி அம்மன், திரெளபதியம்மன், காளியம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றன.

பால்குடத் திருவிழா: ஆடி நான்காம் வெள்ளியையொட்டி, அரியலூரிலுள்ள அருள்மிகு மகா காளியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் செட்டி ஏரியிலிருந்து புனிதநீா், பால்குடங்களை சுமந்து ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனா். இதுபோல, அரியலூா் திரெளபதியம்மன் திருக்கோயிலிலும் பால்குடத் திருவிழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.