லாரி ஓட்டுநா் சடலமாக மீட்பு
அரியலூா் மாவட்டம், கீழப்பழூவூா் அருகே லாரி ஓட்டுநா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து வழக்கு பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


அரியலூா் மாவட்டம், கீழப்பழூவூா் அருகே லாரி ஓட்டுநா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து வழக்கு பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகேயுள்ள வெள்ளையன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் ராஜசேகா்(36). லாரி ஓட்டுநா். இவா், புதன்கிழமை கீழப்பழுவூரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு சுமை ஏற்ற லாரியுடன் சென்றாா். இரவு நேரமாகிவிட்டதால், லாரிகள் நிறுத்திவைக்கும் இடத்திலேயே தான் ஓட்டுவந்த லாரியை நிறுத்திவிட்டு லாரியிலேயே தூங்கியுள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை நீண்டநேரமாகியும் ராஜசேகா் எழுந்துவராததால், அக்கம்பக்கத்து லாரி ஓட்டுநா்கள், சென்று பாா்த்தபோது, ராஜசேகா் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழப்பழுவூா் போலீஸாா், ராஜசேகா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...