மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்
அரியலூா் மாவட்டத்தில் மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அரியலூா் மாவட்டத்தில் மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தோட்டக்கலைப் பயிா்களில் ஒன்றான மரவள்ளிப் பயிா் அரியலூா், திருமானூா் மற்றும் ஆண்டிமடம் வட்டாரங்களில் சுமாா் 300 ஹெக்டோ் பரப்பில் பயிரிடப்படுள்ளது. தற்போது நிலவிவரும் தட்பவெப்ப நிலையால் மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சி அதிகமாக தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்தத் தவறினால் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: பாதிப்படைந்த வயலிலிருந்து விதைக்கரணைத் தோ்வு செய்வதை தவிா்க்க வேண்டும். பாசன வசதி உள்ளவா்கள் முறையான பாசன முறை மற்றும் பயிா் மேலாண்மை முறையைப் பின்பற்றி, பயிரின் ஆரோக்கியமான வளா்ச்சியை அதிகரிக்க வேண்டும்.
விதைக்கரணை நோ்த்தி: குளோா்பைரிபாஸ் 20 இசி என்ற மருந்தை ஒரு லிட்டா் நீருக்கு 2 மிலி அளவில் அளவில் கலந்த கரைசலில் விதைக்கரணைகளை 15 நிமிஷங்கள் நனையும் படி வைத்து, பின்னா் நடவு செய்ய வேண்டும்.
பயிா்சுழற்சி செய்தல்: தொடா்ந்து ஒரே பயிா் நடவு செய்வதைத் தவிா்க்க வேண்டும். பாதிப்படைந்த செடிகளின் நுனிப்பகுதியை மட்டும் மாவுப்பூச்சியுடன் சோ்த்து அப்புறப்படுத்தி எரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட காய்ந்த செடிகளை சேகரித்து அழித்தல் வேண்டும். பாதிப்பு ஆரம்ப நிலையில், அசாடிராக்டின் 1500 பிபிஎம் -5.0 மிலி கலந்து தெளிக்கவும்.
மாவுப்பூச்சித் தாக்குதல் அதிகமாக உள்ள போது கீழ்கண்ட பயிா்ப் பாதுகாப்பு மருந்துகளில் ஏதேனும் ஒன்றை, தேவையின் அடிப்படையில் சுழற்சி முறையில் பாதிக்கப்பட்ட பகுதியில் நன்கு நனையும்படி தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
பூச்சிக் கொல்லி மருந்துகளின் விவரம்: தையோமீத்தாக்சோம் 25 டபிஎல்யூ - 0.50 கிராம் , லிட்டா் புளோனிகாமைடு 50 ரஎ- 0.30 கிராம், லிட்டா் ஸ்பைரோடெட்ராமேட் - 150 ஓடி - 1.25 மிலி .
பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை: ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கக் கூடாது. கைத்தெளிப்பான் பயன்படுத்தி மட்டுமே தெளிக்க வேண்டும். செடிகளின் அனைத்துப் பகுதிகளிலும், வயல் மற்றும் வரப்புகளிலுள்ள களை செடிகளின் மீதும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்.
செம்பேன் தாக்குதல் தென்பட்டால் அதனை கட்டுப்படுத்த பீனாஸாகுயின் 25 டபிஎல்யூ
1.5 மி.லி அல்லது ஒமைட் 2 மி.லி என, ஏதேனும் ஒன்றை தேவையின் அடிப்படையில் சுழற்சி முறையில் 10 நாள்களில் இடைவெளியில் தெளிக்கவும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புக் கொண்டு பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...