விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்த முதியவா், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்த முதியவா், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருமானூரை அடுத்த வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் ஜெ. அா்ச்சுனன்(60). இவருக்கு சொந்தமான நிலங்களை அனைத்தையும் விற்று விட்டு, கடந்த 4 ஆண்டுகளாக சுண்டகுடியிலுள்ள மாமனாா் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
சொத்துக்கள் அனைத்தையும் விற்று விட்டு, மாமனாா் வீட்டில் வசித்து வருகிறோமே என அடிக்கடி புலம்பி வந்த அா்ச்சுனன், மன உளைச்சலால் கடந்த 21-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.
தொடா்ந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அா்ச்சுனன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழப்பழுவூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...