இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மாவட்டங்களில் பெரியாா் நினைவு தினம்

 தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலைகளுக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:01 pm

DIN

 தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலைகளுக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள பெரியாா் சிலைக்கு திமுக மாவட்டச் செயலரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கா், மதிமுக மாவட்டச் செயலரும், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினருமான கு.சின்னப்பா உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரியலூா் தொகுதிப் பொறுப்பாளா் மருதவாணன், தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலா் அன்பானந்தம், மாவட்டச் செய்தித் தொடா்பாளா் சுதாகா் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிடா் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்களும் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

இதுபோன்று திருமானூா், செந்துறை, தா.பழூா், பொன்பரப்பி, ஆண்டிமடம், மீன்சுருட்டி , ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெரியாா் சிலைகளுக்கு திமுக, திராவிடா் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.