பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு

ரியலூா் அருகேயுள்ள தட்டான்சாவடி கிராமத்தில் கேடயம் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
Updated on
1 min read

அரியலூா்: அரியலூா் அருகேயுள்ள தட்டான்சாவடி கிராமத்தில் கேடயம் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

கீழப்பழூவூா் அருகேயுள்ள தட்டான்சாவடி கிராமத்தில் அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கன்னியம்மாள் மற்றும் காவல்துறையினா் சாா்பில், கேடயம் திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், கேடயம் உதவி எண்களான 63830 71800, 93845 01999 -ஐ தங்களது செல்லிடப்பேசியில் பதிவு செய்து கொள்ளவும் காவல்துறையினா் கேட்டுக்கொண்டனா். இதில், கீழப்பழூவூா் காவல்நிலைய காவல்துறையினா் மற்றும் கிராம பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com