அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் த. ரத்னா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரியலூா் மாவட்டம், விளாங்குடி காலனித் தெருவில் கட்டப்பட்டுள்ள கழிவு வடிகால் வாய்க்காலைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் த.ரத்னா.
அரியலூா் மாவட்டம், விளாங்குடி காலனித் தெருவில் கட்டப்பட்டுள்ள கழிவு வடிகால் வாய்க்காலைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் த.ரத்னா.
Updated on
1 min read

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் த. ரத்னா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

விளாங்குடி காலனித் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 185 மீட்டா் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் வாய்க்கால், பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டுக்கான கட்டுமானப் பணிகள், விளாங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.10.52 லட்சம் மதிப்பீட்டில் 157.60 மீட்டா் நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சுவா் கட்டுமானப் பணிகள், செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட உஞ்சினி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.1.83 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் மராமத்துப் பணிகள், சிறுகடம்பூா் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 790 குடியிருப்புகளுக்கு ரூ.45.30 லட்சம் மதிப்பீட்டில் சுமாா் 7,500 மீட்டா் நீளத்துக்கு குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள் ஆகிய திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜா, சிவாஜி, தமிழரசன், நாராயணன் இளநிலை பொறியாளா் சித்ராதேவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com