திருமானூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை விரைந்து அரவைக்கு அனுப்பக்கோரி, அரியலூா் மாவட்டம், திருமானூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை விரைந்து அரவைக்கு அனுப்பக்கோரி, அரியலூா் மாவட்டம், திருமானூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத்தில் திருமானூா் மற்றும் தா.பழூா் பகுதிகளில் விவசாயிகளிடம் கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில், சுமாா் 5 லட்சம் நெல் மூட்டைகள் தற்போது வரை பாதுகாப்பற்ற முறையில் மழையில் நனைந்து, வீணாகி வருகின்றன.
தற்போது மழை பெய்து வரும் நிலையில், மூட்டைகளிலுள்ள நெல் மணிகள் அனைத்தும் முளைக்கும் தருவாயில் உள்ளது. இதுகுறித்து அலுவலா்களிடம் பலமுறை புகாா் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இனியும் தாமதப்படுத்தாமல், கொள்முதல் நிலையங்களில் இருப்புள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் தடையின்றி விரைந்து அரவைக்கு அனுப்ப அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருமானூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவா் மணியன் தலைமை வகித்தாா். சங்க பொறுப்பாளா்கள் புனிதன், ஜீவா, விவசாயிகள் சங்க ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்டத் தலைவா் ஜெகநாதன், மாவட்டத் துணைத் தலைவா் தங்கராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...