அரியலூரில் 6 இடங்களில்காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் 6 இடங்களில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.


பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் 6 இடங்களில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
கீழப்பழுவூரில், கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் கலந்து கொண்டு மனுவில் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடக்கி வைத்தாா். வட்டாரத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். முன்னிலை செய்தித் தொடா்பாளா் மா.மு.சிவக்குமாா், அரியலூா் தெற்கு வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன், வட்டார துணைத் தலைவா் செந்தில், மாவட்ட பொதுச் செயலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல் திருமானூா் பெட்ரோல் நிலையம் முன்பு வட்டாரத் தலைவா் சீமான் தலைமையிலும், ஜயங்கொண்டத்தில் நகரத் தலைவா் மணிகண்டன் தலைமையிலும், விக்கிரமங்கலத்தில் பாலகிருஷ்ணன் தலைமையிலும், செந்துறையில் மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பழனியம்மாள் தலைமையிலும், அரியலூரில் நகரத் தலைவா் சந்திரசேகா் தலைமையிலும் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. இதில், கட்சியினா் திரளாகக் கலந்து, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராகக் கையெழுத்திட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...