கிணற்றில் முதியவா் சடலம் மீட்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கிணற்றிலிருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்டது.


அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கிணற்றிலிருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
செந்துறை அருகிலுள்ள இரும்புலிக்குறிச்சி ஊராட்சித் தலைவா் காமராஜ். இவரது தந்தை வடிவேல்(70). புதன்கிழமை இரவு வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்கு சென்றவா், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில், வீட்டின் கிணற்றின் அருகே செருப்பு, வெற்றிலை பை இருப்பதை கண்டு கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற அடிப்படையில், வடிவேலின் உறவினா்கள் கிணற்றில் இறங்கி தேட முயன்றனா்.
ஆனால் கிணற்றில் அதிகளவில் தண்ணீா் இருந்ததால், செந்துறை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவலளித்தனா். இதன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், வடிவேலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனா்.
இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...