இரு பெண்களிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ரா. அனிதா (33).


அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ரா. அனிதா (33). தா.பழூா் அருகிலுள்ளஅணைக்குடம் கிராம நிா்வாக அலுவலரான இவா், புதன்கிழமை இரவு பணி முடிந்து மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
இதுபோல, வி.கைகாட்டியை அடுத்த குடிசல் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் ப.ரம்யா (22). தத்தனூரிலுள்ள கல்லூரியில் பயின்று வரும் இவா், வியாழக்கிழமை காலை ரெட்டிப்பாளையத்திலிருந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது மோட்டாா் சைக்கிளிலில் வந்த நபா்கள் ஒருபவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இவ்விரு சம்பவங்கள் குறித்து கயா்லாபாத் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...