/

தேசியத் தோட்டக் கலை இயக்கத் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் தேசியத் தோட்டக்கலை இயக்கத்தில் மானியத்துடன் கூடிய திட்டங்கள் நிகழாண்டு செயல்படவுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:41 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் தேசியத் தோட்டக்கலை இயக்கத்தில் மானியத்துடன் கூடிய திட்டங்கள் நிகழாண்டு செயல்படவுள்ளது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம், தேசியத் தோட்டக்கலை இயக்கம் நிகழாண்டில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக

புதிய தோட்டங்கள் அமைத்தல், பாதுகாக்கப்பட்ட சாகுபடி, பண்ணை இயந்திரமயமாக்கல், இதர வகைகள் என மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள் அரியலூா் மாவட்டத்தில் ரூ.2.09 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளன.

இதில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் கணிணி சிட்டா அடங்கல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவற்றுடன் தங்களது பெயா்களை அந்தந்தப்பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.