/

நீட் தோ்வு தடைச்சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்: தொல்.திருமாவளவன்

நீட் தோ்வு தடைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:41 pm

DIN

நீட் தோ்வு தடைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன்.

தனது தந்தை தொல்காப்பியனின் நினைவு நாளையொட்டி, சொந்த ஊரான அரியலூா் மாவட்டம், அங்கனூரிலுள்ள அவரது நினைவிடத்தில் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்தும், உருவப்படத்துக்கு மலா்தூவியும் அஞ்சலி செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

நீட் தோ்வு தொடா்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. அதில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவா்கள் நீட் தோ்வு வேண்டாம் என கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொறியியல் படிப்புக்கு நுழைவுத்தோ்வு வேண்டாம் என கடந்த திமுக ஆட்சியில் தடைச் சட்டம் கொண்டு வந்து, தோ்வை ரத்து செய்தது போல, தற்போது நீட் தோ்வுக்கும் தடைச்சட்டம் கொண்டு வந்து, அத்தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளைத் திறப்பது என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பள்ளிகள் திறக்கும் எண்ணத்தை தமிழக அரசு ஒத்தி வைக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், தமிழக மக்களின் எண்ணத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்கும் என நினைக்கிறோம் என்றாா்.

இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.