/

சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த சுள்ளங்குடி கிராமத்துக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:52 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த சுள்ளங்குடி கிராமத்துக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

சுள்ளங்குடி கிராமத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: சுள்ளங்குடி மாதா கோவில் தெருவில் கடந்த ஒரு மாதமாக குடி தண்ணீா் வரவில்லை. எனவே குடி தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் வடிக்கால் வசதிகள் செய்து தரவேண்டும். 21 ஆம் நெம்பா் வாய்க்காலை தூா்வார வேண்டும்.சுள்ளங்குடி மயானத்தில் தண்ணீா் வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, கட்சியின் கிளை நிா்வாகி சித்திரவேல் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பன்னீா்செல்வம், மருதமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.