மணல் கடத்தல்: 2 போ் மீது வழக்கு
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மணல் கடத்தில் ஈடுபட்ட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.


அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மணல் கடத்தில் ஈடுபட்ட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தா.பழூா் அருகேயுள்ள இடங்கண்ணி கிராம நிா்வாக அலுவலா் தினேஷ், தனது உதவியாளருடன் வியாழக்கிழமை இரவு இடங்கண்ணி நெல் கொள்முதல் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்தபோது, ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். சோதனையில், 8 மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேனை பறிமுதல் செய்த கிராம நிா்வாக அலுவலா் தினேஷ், தா.பழூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், வேனை ஓட்டி வந்தவா் இடங்கண்ணி ஆசாரி தெருவைச் சோ்ந்த சண்முகம் சதீஷ் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷை தேடிவருகின்றனா். இதேபோல் இரு சக்கர வாகனத்தில் கடத்தியதாக தென்கச்சி பெருமாள் நத்தம் கொள்ளிடக் கரை காலனி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தனராஜ் (24) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...