/

அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

4 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்துக்கு முற்றிலும் தாற்காலிகமாக பணிபுரிய மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:25 pm

DIN

அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் மற்றும் செந்துறையில் கரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்காக மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புநா்கள் நிலை-2 மற்றும் நுண்கதிராளா்கள் என தலா 4 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்துக்கு முற்றிலும் தாற்காலிகமாக பணிபுரிய மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் கல்வி, அனுபவம் மற்றும் சாதிச்சான்றுகளுடன் நலப்பணிகள் இணை இயக்குநா் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், துறையூா் சாலை, பெரம்பலூா் - 621 212 என்ற முகவரியில் வரும் 26 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். நோ்காணல் ஜூலை 30. இந்தப் பணிகளுக்கு அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.