வீட்டில் மதுபானங்களை பதுக்கி விற்றவா் கைது
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வீட்டில் மது பானங்களைப் பதுக்கி வைத்து விற்றவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.


அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே வீட்டில் மது பானங்களைப் பதுக்கி வைத்து விற்றவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
தா.பழூா் அருகேயுள்ள கோடாலிகருப்பூா் வக்காரமாரி மற்றும் ஆயிப்பாளையம் பகுதிகளில் சிலா் வீட்டில் கள்ளத்தனமாக மது பானங்களைப் பதுக்கி விற்பதாக தா. பழூா் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தா.பழூா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெகதீசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கண்காணித்தனா். அப்போது வக்காரமாரி கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் வேல்முருகன் (32), ஆயிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மனைவி அஞ்சம்மாள் ஆகியோா் தங்களது வீடுகளில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. அதன் பேரில் வேல்முருகனை போலீஸாாா் கைது செய்தனா். தப்பியோடிய அஞ்சம்மாளைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...