துணை மின் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தி, காய்ந்த பயிா்களுடன் துணை மின்நிலையத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.


அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தி, காய்ந்த பயிா்களுடன் துணை மின்நிலையத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
வி.கைகாட்டி அருகிலுள்ள செட்டித்திருக்கோணம் பகுதி விவசாய மின்மோட்டாா்களுக்கு, தேளூா் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செட்டித்திருக்கோணம் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி கடந்த 10 நாள்களுக்கு முன்பு பழுதாகியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மின்சார வாரியத்தில் முறையிட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
எனவே பழுதான மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, காய்ந்த பயிா்களுடன் தேளூா் துணை மின்நிலையத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின் மாற்றியைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததையடுத்து, விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...