/

நலவாரியத் தொழிலாளா்களுக்கு ரூ.13.02 லட்சம் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 700 தொழிலாளா்களுக்கு ரூ.13.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:19 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 700 தொழிலாளா்களுக்கு ரூ.13.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற விழாவில், அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த விழாவில், மேலும் அவா் பேசியது:

மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 472 தொழிலாளா்களுக்கு ரூ.6.32 லட்சம் மாதாந்திர ஓய்வூதியம், 207 தொழிலாளா்களுக்கு

ரூ.4.06 லட்சம் கல்வி உதவித் தொகை, 8 தொழிலாளா்களுக்கு ரூ.2 லட்சம் இயற்கை மரண உதவித் தொகை, 12 தொழிலாளா்களுக்கு ரூ.58 ஆயிரம் திருமண உதவித் தொகை, ஒரு பெண் தொழிலாளிக்கு ரூ.3 ஆயிரம் மகப்பேறு உதவித் தொகை என மொத்தமாக 700 பேருக்கு ரூ.13.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. எனவே அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்று, தொழிலாளா்கள் பயன் பெற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வுக்கு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கு.விமலா, கண்காணிப்பாளா் ஜா.நூருல்லா மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.