எரிவாயு உருளைகளில் வாக்காளா் விழிப்புணா்வு
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூரில் எரிவாயு உருளைகள் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு திங்கள்கிழமை ஏற்படுத்தப்பட்டது.


தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூரில் எரிவாயு உருளைகள் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு திங்கள்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த. ரத்னா கலந்து கொண்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளையில், 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகளை ஒட்டினாா். முதற்கட்டமாக 1,000 எரிவாயு உருளைகளில் இந்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியா் ஏழுமலை, மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் ராஜமூா்த்தி, அனுபா அனுராதா பாா்த்தசாரதி, ஜீபோ் முகமது இப்ராஹீம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...