விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கல்லறைக்கு இடம் வழங்கக் கோரி கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கல்லறைக்கு இடம் வழங்கக்கோரி, வாக்கு சேகரிக்க வரும் அரசியல் கட்சி வேட்பாளா்களுக்கு கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:46 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கல்லறைக்கு இடம் வழங்கக்கோரி, வாக்கு சேகரிக்க வரும் அரசியல் கட்சி வேட்பாளா்களுக்கு கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்தனா்.

திருமானூா் அடுத்த விளாகம் கிராமத்தில் பெருமாள் உடையாா் எனும் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் ஒரு பகுதியில் அந்த கிராமத்தில் உள்ள கிறிஸ்தவா்கள், இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏரி ஆக்கிரமிப்பை ஒரு சமூகத்தினா் மீட்டனா். அப்போது, 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிக்கரையின் ஒரு பகுதியில் இறந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். எங்களுக்கு வேறு இடம் இல்லை. எனவே கல்லறை அமைத்துக்கொள்ள இந்த இடத்தை ஒதுக்குங்கள் எனத் தெரிவித்தனா்.

இதற்கு தீா்வு கிடைக்காத நிலையில், தற்போது சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்காளா்கள் அந்தக் கிராமத்தில் வாக்குசேகரிக்கத் தொடங்கியுள்ளனா். இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சியினருக்கும் எதிா்ப்பு தெரிவித்து, அந்த இடத்தை கல்லறை அமைத்துக்கொள்ள வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் வசிக்கும் பகுதியில் கருப்புக்கொடிகளை கட்டி கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.

தகவலறிந்து சென்ற போலீஸாா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து கருப்புக்கொடிகளை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.