விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திருமானூரில் நிரந்தர கொள்முதல் நிலையம் மதிமுக வேட்பாளா் உறுதி

திருமானூா் பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பா பொதுமக்களிடம் உறுதியளித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:47 pm

DIN

திருமானூா் பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பா பொதுமக்களிடம் உறுதியளித்தாா்.

அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் சாா்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் வழக்குரைஞா் கு.சின்னப்பா, சாத்தமங்கலம், வெற்றியூா், கள்ளூா், கீழகொளத்தூா், விழுப்பனங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, கோவிலூா், செங்கராயன் கட்டளை, வரப்பன்குறிச்சி, மேலராமநல்லூா், நதியனூா், காமரசவல்லி மற்றும் இடைப்பட்ட கிராமங்களில் தனது கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று திங்கள்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, திருமானூா் ஒன்றியப் பகுதி டெல்டாவாக உள்ளது. இங்கு நிரந்தர நெல் கொள்முதல் நிலையமும், அறுவடை காலங்களில் அதிகபட்ச நெல் கொள்முதல் நிலையங்களையும் திறக்க நடவடிக்கை மேற்கொள்வேன். கொள்ளிடத்தில் திருமானூா், திருமழபாடி, ஏலாக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.