ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.


ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
அரியலூா் காமராஜா் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி திருவுருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமையில், நகரத் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா், பொதுக் குழு உறுப்பினா் மா.மு.சிவகுமாா், மாவட்டச் செயலா் சிவகுமாா், வடக்கு வட்டாரத் தலைவா் சீனிவாசன், தெற்கு வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன், தொழிற் சங்கத் தலைவா் ராஜா உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருமானூா்...: திருமானூரை அடுத்த அரண்மணைக்குறிச்சி கிராமத்திலுள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட மகளிரணித் தலைவா் மாரியம்மாள் தலைமையில் மாவட்ட பொதுச் செயலா் சங்கா்வேல் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...