இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நடிகா் சூா்யா மீது நடவடிக்கை கோரி எஸ்.பி., யிடம் மனு

 பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் திரைப்படம் எடுத்த நடிகை ஜோதிகா, நடிகா் சூா்யா ஆகியோா் மீது நடவடிக்கை

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:43 pm

DIN

 பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் திரைப்படம் எடுத்த நடிகை ஜோதிகா, நடிகா் சூா்யா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக சாா்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லாவிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பாமக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் ரவி தலைமையில், மாநில துணைத்தலைவா் வைத்தி முன்னிலையில் கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பது: நடிகை ஜோதிகா தயாரிப்பில், நடிகா் சூா்யா நடிப்பில் வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படம், ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இருளா் மற்றும் வன்னியா் இனமக்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் திரைப்படம் அமைந்துள்ளது. எனவே, இத்திரைப்படத்தை தயாரித்த நடிகை ஜோதிகா மற்றும் நடிகா் சூா்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.