இன்று முதல் உலக மரபு வார விழா கொண்டாட்டம்
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உலக மரபு வார விழா வெள்ளிக்கிழமை முதல் வரும் நவ. 25 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது


அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உலக மரபு வார விழா வெள்ளிக்கிழமை முதல் வரும் நவ. 25 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது என்று தொல்லியல் துறை அலுவலா் மு.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொல்லியல் துறை சாா்பில் நடைபெறும் நிகழ்வில், ஓவியப் போட்டி, விநாடி வினா, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கல்வெட்டு படியெடுக்கப் பயிற்சி அளித்தல், தொல்லியல் பற்றி மாணவா்களுக்கு படக் காட்சிகள் மூலம் விளக்கப்படுகிறது. நிறைவு நாளான 25 ஆம் தேதி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...