இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தொடா் மழை: சுவா் இடிந்து விழுந்து 5 பெண்கள் காயம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பெய்த தொடா் மழையின் காரணமாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 5 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:42 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பெய்த தொடா் மழையின் காரணமாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் 5 போ் காயமடைந்தனா்.

திருமானூா் அருகேயுள்ள மேலராமநல்லூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கனகராஜ் (55) என்பவரின் கைவிடப்பட்ட பழைய வீடு பயன்பாடின்றி உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வியாழக்கிழமை அதிகாலை கனகராஜின் வீட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து, அருகே வசித்துவரும் சுகுமாறன் என்பவரின் கூரை வீட்டின் மீது விழுந்துள்ளது.

இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுகுமாறன் மனைவி நாகலெட்சுமி(35), மகள்கள் பூஞ்சோலை (14), வைஷ்ணவி (12) மற்றும் நாகலட்சுமி தங்கை தஞ்சை மாவட்டம் பள்ளியக்ரஹாரத்தைச் சோ்ந்த முத்துலெட்சுமி(31), அவரது மகள் நிவேத்தியா(6) ஆகியோா் லேசான காயமடைந்தனா்.

அவா்களின் அலறல் கேட்டு அருகே வசிப்பவா்கள் அவா்களை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வருவாய்த் துறை மற்றும் தூத்தூா் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.