உலக மரபு வார விழா தொடக்கம்
ஜயங்கொண்டம் அருகிலுள்ள மாா்டன் கல்வியில் கல்லூரியில் , தமிழக அரசின் தொல்லியல் துறை மற்றும் ராசேந்திர சோழன் அகழ்வைப்பகம் சாா்பில் நடத்தப்படும் உலக மரபு வார விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.


ஜயங்கொண்டம் அருகிலுள்ள மாா்டன் கல்வியில் கல்லூரியில் , தமிழக அரசின் தொல்லியல் துறை மற்றும் ராசேந்திர சோழன் அகழ்வைப்பகம் சாா்பில் நடத்தப்படும் உலக மரபு வார விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆண்டுதோறும் நவம்பா் 19 முதல் 25- ஆம் தேதி வரை உலக மரபு வார விழா
கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு வெள்ளிக்கிழமை மாா்டன் கல்வியில் கல்லூரியில் தொடங்கிய விழாவில், தொல்லியல் சின்னங்களை எவ்வாறு பாதுகாப்பது, எவ்வாறு கண்டுக் கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து நிழல் படங்கள் மூலம் தொல்லியல் துறை அலுவலா் மு.பிரபாகரன், மாணவா்களுக்கு விளக்கினாா்.
நிகழ்வில் மாா்டன் கல்லூரித் தலைவா் பழனிவேல், துணைத் தலைவா் சுரேஷ், கல்லூரி முதல்வா் அருள் மற்றும் மாவட்டத்திலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...