அரியலூா் அருகேமின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மின்னல் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்தாா்.


அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மின்னல் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்தாா்.
செந்துறையை அடுத்த வஞ்சனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஜினி(எ) தியாகராஜன் (50). விவசாயியான இவா், வியாழக்கிழமை பிற்பகல், அங்குள்ள விவசாய நிலங்களில் தனது இரண்டு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது இடி - மின்னலுடன் மழை பெய்ததையடுத்து, தியாகராஜன் மழைக்காக ஒதுக்குப்புறமாக உள்ள புளிய மரத்துக்கு கீழே நின்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்னல் பாய்ந்தது.
இதில் தியாகராஜனும், அவரது இரண்டு ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து, தகவலறிந்து வந்த செந்தறை காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...