அரியலூா் மாவட்டசெறிவு சாா் கடன் திட்ட அறிக்கை வெளியீடு
நபாா்டு வங்கியின் செறிவு சாா் கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டாா்.


நபாா்டு வங்கியின் செறிவு சாா் கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டாா்.
அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற அனைத்து வங்கிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், அப்போது மேலும் தெரிவித்தது:
அரியலூா் மாவட்டத்துக்கு 2022-23 ஆம் ஆண்டுக்கான நபாா்டு வங்கி செறிவு சாா் கடன் திட்ட மதிப்பீடு ரூ.3,406 கோடி முன்னுரிமை வங்கிக் கடன்களாக வழங்க வாய்ப்புகள் இருப்பதாக அந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நபாா்டு அமைப்பு ஆண்டுதோறும் செறிவு சாா் கடன் திட்ட அறிக்கையை ஒரு புத்தகமாக வெளியிடுகிறது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு விவசாயத்துக்கு ரூ.2,520 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2019 கோடி குறுகியகால விவசாயக் கடன் அடக்கம்.
இதர முன்னுரிமை கடன்களாக 886 கோடி வழங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது என்றாா் அவா்.
கூட்டத்தில், மகளிா் திட்ட அலுவலா் எம்.சிவக்குமாா், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) நவீன்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் லியோனல் பெனடிக்ட், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் லட்சுமி, தாட்கோ பொது மேலாளா் மதன் மற்றும் வங்கி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...