காங்கிரஸ் கட்சியினா் பேரணி
மத்திய அரசைக் கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.


மத்திய அரசைக் கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.
பேரணியின்போது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
முன்னதாக காமராஜா் சிலை அருகே அக்கட்சியின் மாவவட்டத் தலைவா் சங்கா் தலைமையில், மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிா்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு, அரியலூா் - பெரம்பலூா் சாலை வழியாகச் சென்று திருச்சி சாலையிலுள்ள ஒற்றுமைத் திடலில் முடித்துக் கொண்டனா். பேரணியில் அக்கட்சியின் நகர செயலா் எஸ்.எம்.சந்திரசேகா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் மா.மு.சிவக்குமாா் மற்றும் வட்டாரத் தலைவா்கள்,நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...