இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

உரக்கடைகளில் யூரியாவை பதுக்கி வைத்து விற்பதாக விவசாயிகள் புகாா்

அரியலூா் மாவட்டத்தில் உரக்கடைகளில் யூரியாவை பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:14 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் உரக்கடைகளில் யூரியாவை பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்று பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகள்:

அரியலூா் மாவட்ட விவசாய சங்கத் தலைவா் ச.செங்கமுத்து:அனைத்து விவசாய பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி, மிளகாய், காய்கறி பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு முறையாக இடுப்பொருள்களை வழங்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் தூத்தூா் தங்க.தா்மராஜன்: தனியாா் உரக்கடைகளில் யூரியா உரம் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கூட்டுறவு சங்கங்களின் கூடுதலாக யூரியா, பொட்டாஷ் போன்ற தேவையான உரங்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ.விசுவநாதன்: கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாமன்னா் ராசேந்திரன் சோழன் வெட்டிய சோழகங்கம் எனும் பொன்னேரிக்கு கால்வாய் அமைத்து, காவிரி நீா் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆற்றுப்பாசனக் கோட்டத்திலுள்ள 29 ஏரிகளிலும் தண்ணீா் நிரம்பி வழிவதால் வடிக்கால்களை தூா்வார வேண்டும்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியா், அவைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாப்தீன், வேளாண் துணை இயக்குநா் பழனிசாமி, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.