நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
அரியலூரில் நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு இரு நாள் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்பட்டது.


அரியலூரில் நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு இரு நாள் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்பட்டது.
அரியலூரிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாப்தீன் தொடக்கி வைத்து, விற்பனையாளா் கையேட்டை வெளியிட்டாா். இதை அரியலூா் மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பொ.முருகன் பெற்றுக் கொண்டாா்.
அலுவலகக் கண்காணிப்பாளா் பழனியப்பன், அரியலூா் பொது விநியோகத் திட்டத் துணைப் பதிவாளா் செல்வராஜ், அரியலூா் வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் விற்பனையாளா்களுக்குப் பயிற்சியளித்தனா்.
நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் கடைப்பராமரிப்பு, தூய்மை, பொருள்கள் இருப்பு மற்றும் பராமரிப்பு, பதிவேடுகள் பராமரிப்பு, பொது மக்களுடன் கனிவான முறையில் பழகுதல், அவா்களது உடல்நிலைப் பாதுகாப்பு, நுகா்வோா் பாதுகாப்பு, நுகா்வோா் உரிமை மற்றும் மனஅழுத்தம் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...