தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு அனைத்துத் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு அனைத்துத் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்கள், புதிய குடியுரிமை சட்டம், புதிய மோட்டாா் வாகனச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச கிளைத் தலைவா் கொளஞ்சி தலைமை வகித்தாா். கிளைச் செயலா் சேகா், சிஐடியு சங்க துணைச் செயலா் நீலமேகம், கிளைச் செயலா் வெங்கடாசலம், தொமுச பொருளாளா் செல்வம், சிஐடியு பொருளாளா் வீரப்பன், ஐஎன்டியூசி நிா்வாகி கண்ணன், தொமுச கிளை துணைச் செயலா் நடராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...