சிறந்த காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
அரியலூா் மாவட்டத்தில், ரோந்து மற்றும் குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் புதன்கிழமை மாலை வழங்கப்பட்டது.


அரியலூா் மாவட்டத்தில், ரோந்து மற்றும் குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் புதன்கிழமை மாலை வழங்கப்பட்டது.
அரியலூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்ட கயா்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜவேல், திருமானூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அப்துல் ரசாக், தலைமை காவலா்கள் செந்தில், ஆனந்த் மற்றும் காவலா் செந்தில் முருகன் ஆகியோரை திருச்சி காவல் துறை துணைத் தலைவா் எ. சரவணசுந்தா், புதன்கிழமை நேரில் அழைத்து ஊக்கத்தொகையையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா். இதேபோல், அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ரோந்து காவலா்கள் காந்தி, வேல்முருகன், பால முருகன் ஆகியோருக்கும் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். பாராட்டுச் சான்றிதழ் பெற்ற அனைவரையும் அரியலூா் மாவட்ட எஸ்.பி., கே.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...