குறிச்சிகுளம் திரெளபதியம்மன் கோயில் தேரோட்டம்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம், தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது.


அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம், தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் நாள்தோறும் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில், திரெளபதியம்மன், காளியம்மன், விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தன.
பின்னா் மங்கள இசை, செண்டை மேளம் முழங்க வாண வேடிக்கையுடன் திருத்தோ் புறப்பாடு நடைபெற்றது. 7 ஊா் கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தோ், மாலை 6 மணிக்கு கோயிலை வந்தடைந்தது.
இதைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு மேல் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்கள் தீ குண்டத்தில் இறங்கி, தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். இவ்விழாவில் குறிச்சிகுளம், அசாவீரன்குடிக்காடு, ஆா்எஸ்.மாத்தூா், பூமுடையான் குடிக்காடு, கஞ்சமலைப்பட்டி, நயினாா் குடிக்காடு, படைவெட்டி குடிக்காடு ஆகிய கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...