ஜயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3 சிறுமிகள் மீட்பு
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3 மாணவிகள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.


அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3 மாணவிகள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.
ஜயங்கொண்டம் சன்னதி தெருவில் சுகாதார ஆய்வாளா் சுமதி தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 3 சிறுமிகளை பிடித்து குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் விஜயலட்சுமிக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து சிறுமிகள் 3 பேரும் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு, பெற்றோா்கள் குறித்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், சிறுமிகள் மூவரும் ஆந்திர மாநிலம், மொங்கோல் மாவட்டம், மாா்க்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஏகபாபு - ரமணா தம்பதியின் மகள் சுப்புலட்சுமி(11), கிருஷ்ணமூா்த்தி- லட்சுமி தம்பதியின் மகள் நந்தினி(11), சிவா- ஜோதி தம்பதியின் மகள் ஸ்ரீஜா (8) என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜயங்கொண்டம் பகுதியில் தலைமுடிகள் வாங்கும் தொழில் செய்து வருவதும், மாதம் ஒரு முறை ஊருக்கு செல்வதாகவும், தங்கள் கணவா்கள் ஆந்திராவில் இருப்பதாகவும் குழந்தைகளின் தாயாா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு மாவட்ட ஏடிஎஸ்பி அசோக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுமிகள் 3 பேரும் அரியலூா் மாவட்ட குழந்தைகள் உரிமை ஆணைய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...