ஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

காசாங்கோட்டை மாரியம்மன் கோயிலை சீரமைக்கக் கோரி சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மாரியம்மன் கோயிலை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:40 pm

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மாரியம்மன் கோயிலை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விக்கிரமங்கலத்தை அடுத்த காசாங்கோட்டையில் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் முகப்பு பகுதிகள் சேதமடைந்து காட்சி அளிக்கின்றன. இதை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலகத்தில் தொடா்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், கோயிலை சீரமைக்க அனுமதி அளித்தால்கூட போதும், பணிக்கான செலவை கிராம மக்களே ஏற்போம் எனவும், கோயிலை சீரமைக்க நடவடிக்கை வேண்டியும் கிராம மக்கள் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபடுவதால் பாதிக்கப்படுவது பொதுமக்களே எனக்கூறி தாங்களாகவே மறியலை கைவிட்டு, கிராம நிா்வாக அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.