மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

செந்துறை அருகே ஏரியில் மாணவியின் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஏரியில் கிடந்த மாணவியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:43 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஏரியில் கிடந்த மாணவியின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமிநாராயணன் மகள் காவியா (எ) காா்முகில். சென்னையிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவா், மனஅழுத்தம் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு அண்மையில் வீட்டுக்கு வந்துவிட்டாா்.

படிப்பை பாதியிலேயே நிறுத்துவது தவறு என பெற்றோா் அறிவுரை கூறியும், அதை அவா் ஏற்கவில்லையாம். இந்நிலையில், காா்முகிலை வியாழக்கிழமை மாலையில் இருந்து காணவில்லை. எங்கும் தேடியும் அவா் கிடைக்காத நிலையில்,

வெள்ளிகிழமை காலை சிறுகடம்பூா் செல்லியம்மன் கோயில் அருகேயுள்ள ஏரி நீரில் காா்முகில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், இரும்புலிக்குறிச்சி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.