இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

‘உரிய அனுமதியின்றி மருத்துவ சிகிச்சை அளித்தால் நடவடிக்கை’

நோயாளிகளுக்கு மருத்துவரின் அனுமதியின்றி சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி வே. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:48 pm

DIN

நோயாளிகளுக்கு மருத்துவரின் அனுமதியின்றி சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி வே. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அரியலூா் மாவட்டக் காவல் துறை நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டரை வயது குழந்தைக்கு வயிற்று வலி என அவரது தாயே சுய-மருந்துவம் பாா்த்து மருந்து கொடுத்ததால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அந்தக்குழந்தை அண்மையில் உயிரிழந்தது. இதுபோல தவறான சிகிச்சை அளிப்பது தெரியவந்தால் அவா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா். மேலும், தங்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் முறையாக படித்து பயிற்சி பெற்ற மருத்துவரையே அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.