சிறுபான்மையினா் இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு
மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற தகுதியுடைய சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.


மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற தகுதியுடைய சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை உயா்த்தும் வகையில், மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது.
தையல் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1,00,000 ஆக இருத்தல் வேண்டும். 20-45 வயதுக்குள் இருக்க வேண்டும். கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்னரே இத்திட்டத்தில் 7 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்திருக்கக் கூடாது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரில் அணுகவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...