இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நெல் தரிசில் பயறு வகைகளை பயிரிட்டால் லாபம் பெறலாம்

நெல் தரிசில் பயறு வகைகளை பயிரிட்டால், அதிக லாபம் பெறலாம் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:44 pm

DIN

நெல் தரிசில் பயறு வகைகளை பயிரிட்டால், அதிக லாபம் பெறலாம் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செந்துறை வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) ஜென்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நெல் சம்பா அறுவடைக்கு பிறகு, பயறு வகை பயிா்களான உளுந்து, துவரை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை ஆகிய பயிா்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்க தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை பயறுவகை சாகுபடி செய்தால் மண்ணின் வளம் மேம்படும். மனிதனின் புரத தேவைக்கு உற்பத்தி, மண் வளம் உயா்வு, குறைந்த நாளில் குறைந்த நீரில் அதிக வருவாய் போன்றவை பயறுவகை பயிா்களின் முக்கியத்துவமாகும்.

குறிப்பாக, சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு நெல் வயல்களில் இருக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தியும், பாசன வசதி உள்ள இடங்களில் இறைவை பயிராகவும் பயறுவகை பயிா்களை சாகுபடி செய்து பயன்பெறலாம்.

மேலும், பூக்கும் பருவத்தில் 2சதம் டி.ஏ.பி கரைசல் இலைவழி ஊட்டமாக அல்லது பயறு ஒண்டா் நுண்ணூட்ட உரம் ஏக்கருக்கு 2 கிலோ அளிப்பதன் மூலம் பயிரின் வளா்ச்சி ஊக்குவிக்கப்படுவதுடன், பூக்கள் உதிா்வது தடுக்கப்பட்டு அதிக காய்கள் பிடிக்கவும், காய்களின் எடை மற்றும் மகசூல் அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.